29.4 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

கம்போங் ஜாவி பன்றி கொட்டகை பிரச்சனைக்கு தீர்வு காண உரிமையாளருக்கு2 வார கெடு

🔥 Views : 13
👁 Reading Now : 31

தென் செபராங் பிறை மாவட்டத்தின் கம்போங் ஜாவியில் பன்றிக் கொட்டகை காரணமாக ஏற்பட்டுள்ள கால்வாய் பிரச்சனையை இன்னும் இரண்டு வாரத்திற்குள் தீர்க்க வேண்டுமென சம்பந்தப்பட்ட பன்றி வளர்ப்பு உரிமையாளருக்கு செபராங் பிறை மாநகர் மன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.அங்கு பன்றி வளர்க்கப்பட்டுப் வருவதால்,அதற்கு தேவையான கால்வாய் வசதிகள் அமைக்கப்படாததால்,நீரோட்டம் தடைப்பட்டு,மழைக்காலங்களில் கடுமையான வெள்ளம் ஏற்படுவதோடு,பன்றியை கழிவுகளும் துர்நாற்றத்தை ஏற்படுவதாக இங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் புகார் தெரிவித்தனர். இங்கு உடனடியாக 1.22 மீட்டர் ஆழத்திற்கு மண்ணால் ஆன கால்வாயை அமைக்க வேண்டுமென அந்த பன்றி உரிமையாளரை செபராங் பிறை மாநகர் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. வெள்ளப் பிரச்சனை மற்றும் பன்றிக் கழிவுகளின் துர்நாற்றத்தால் கடந்த பல ஆண்டுகளாக சுகாதாரக் கேட்டினையும் இங்கு வசித்து வரும் மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles