
மலாக்கா மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் நோர் ஹிஷாம் பயன்படுத்திய மலாக்கா மாநில அரசாங்கத்தின் டொயோட்டா கேம்ரி காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மலாக்கா மாநில செயலாளர் அலுவலகம் செய்த புகார் அடிப்படையில் நேற்றிரவு அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் அப்துல் மஜிட் தெரிவித்தார். பெக்கலான் பத்து சட்டமன்ற உறுப்பினரான நூர் இஸாம் டொயோட்டா கேம்ரி காரை பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மலாக்கா மாநில முதல்வர் சுலைமானுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்ட 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இவரும் ஒருவராவார்.
