
வரும் பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத் தொகுதியில் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி போட்டியிடலாம் என்று பினாங்கு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. 2008 இல் நடைபெற்ற தேர்தலில் பத்துகவான் நாடாளுமன்றத்திலும் பிறை சட்டமன்றத்திலும் டாக்டர் ராமசாமி அமோக வெற்றி பெற்றார். 2013 மற்றும் 2018 இல் நடந்த தேர்தல்களில் பிறை சட்டமன்றத் தொகுதியில் அதுக்கு வாக்குகளில் வாகை சூடினார். மூன்று தவணைகளாக பினாங்கு மாநில துணை முதல்வராக இருந்து மிகச் சிறந்த முறையில் சேவையாற்றி இருக்கும் பேராசிரியர் டாக்டர் ராமசாமி வரும் பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று வர்ணிக்கப்படுகிறது. டாக்டர் ராமசாமி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றிமாலை சூடுவது உறுதி என்று செபெராங் பிறை கவுன்சிலர் டேவிட் மார்ஷெல் தெரிவித்தார். இதனிடையே பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனியாண்டி மீண்டும் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படும் வேலையில் புதுமுக வேட்பாளராக டேவிட் மார்ஷெல் களம் இறக்கப்படுவாரா என்பது மிக விரைவில் தெரியவரலாம்.