
நாட்டில் உள்ள 200 தமிழ் பாலர்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளமும் 220 பாலர் பள்ளிகளுக்கு மானியமும் ஏன் கொடுக்கப்படவில்லை என்று மீரா கட்சியின் தேசிய தலைவர் கே.பி. சாமி கேள்வியை எழுப்பியுள்ளார். இதனால் பாலர் பள்ளிகளில் பயிலும் 6 ஆயிரம் மாணவர்கள் மற்றும் 200 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். யார் யாருக்கோ லட்சக்கணக்கான வெள்ளி மித்ரா மூலம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் பள்ளிகள் மற்றும் பாலர் பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பது ஏன் என்றார் அவர். தேசிய முன்னணி மற்றும் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியில் பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் முறையாக கொடுக்கப்பட்டது. ஆனால் இப்போது ஏன் கொடுக்கப்படவில்லை. தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் பாலர் பள்ளி ஆசிரியர்களை வஞ்சிப்பது எந்த வகையில் நியாயம் என்று அவர் கேள்வியை எழுப்பினார்.



