
ஈராண்டுகளுக்கு முன்பு தமது காரை ,மலேசிய இராணுவப் படையின் கவச வாகனம் மோதித் தள்ளிய சம்பவம் தொடர்பில் தொடுக்கப்பட்ட சிவில் வழக்கு ஒன்றில் 52 வயது இந்திய ஆசிரியை ஆர்.சாந்தி வெற்றிப் பெற்றார். அந்த இராணுவ கவச வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக அவர் தொடுத்த வழக்கின் தீர்ப்பை சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று காலை அறிவித்தது. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மூன்று தரப்பினரும் அலட்சியத்துடன் நடந்துக் கொண்டிருப்பதால் ,பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டுமென மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.



