
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் தொகுதி ஒதுக்கீடு குறித்து பாஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யவில்லை என்று மலாக்கா மாநில அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ராவூப் தெரிவித்தார். இதர கட்சிகளுடன் ஒத்துழைப்பு குறித்து அம்னோ ஆலோசிக்கவில்லை. அம்னோ தன்னை வலுப்படுத்திக் கொள்ள முயற்சித்து வருகிறது. பின்னர் அது தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றார் அவர்.



