
பினாங்கு மாநில ஜசெகவில் பிளவா என்று கூறப்படும் செய்திகளில் உண்மை இல்லை என்று பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனியாண்டி தெரிவித்தார். பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இதுபோன்ற கட்டுக்கதைகள் வெளி வருவது சகஜம். பிணங்கு மாநில பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கமும் மாநில ஜசெகவும் வலுவுடன் இருக்கிறது. அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார் அவர். இதனிடையே பினாங்கு மாநில அரசாங்கம் 500 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மலிவான மடிக்கணினிகள் வழங்கியதாக கூறப்படுவது சுத்தப் பொய். சம்சோங் கையடக்க மடிக்கணினிகளை வழங்கி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவி புரிந்து இருக்கிறோம் என்று அவர் சொன்னார்.