
பினாங்கு மத்திய செபராங் பிறை,புக்கிட் தெங்கா அருள்மிகு ஸ்ரீ மங்கள நாயகி அம்மன் ஆலயத்தின் வளர்ச்சிக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குய் சியா லியோங் 30 வெள்ளி நன்கொடை வழங்கினார். ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி பூஜைக்குப் பிறகு,முதல் கட்டமாக 10 ஆயிரம் வெள்ளிக்கான காசோலையை ஆலயத் தலைவர் அரிகிரிஷ்ணனிடம் அவர் ஒப்படைத்தார். தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆலயத் திருப்பணிக்கும் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் ஆலய கும்பாபிஷேகத்திற்குமாக தமது பங்களிப்பாக இந்த நன்கொடையை வழங்குவதாக புக்கிட் தெங்கா பிகேஆர் சட்டமன்ற உறுப்பினருமான குய் சியா லியோங் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த நிகழ்வில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ இராமச்சந்திரன் முத்தையா,தொழிலதிபர் கலைச்செல்வன் உட்பட வட்டாரப் பொதுமக்களும் திரளாகக் கலந்துக் கொண்டனர்.



