
வரும் அக்டோபர் 30ஆம் தேதி கெடா மற்றும் கிளாந்தான் மாநிலங்களில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும். நவம்பர் 1ஆம் தேதி பினாங்கு, பேராக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஆரம்பம் மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் குறிப்பிட்ட தேதியில் பள்ளிகளுக்கு செல்லலாம் என்று கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.



