
நாட்டில் இதுவரை 2 கோடியே 20 லட்சத்து 13 ஆயிரத்து 263 பேர் இரண்டு தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். மேலும் 2 கோடியே 27 லட்சத்து 64 ஆயிரத்து 203 பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 10 லட்சத்து 39 ஆயிரத்து 689 பேர் அல்லது 33 விழுக்காட்டினர் இரண்டு தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 24 லட்சத்து 91 ஆயிரத்து 822 பேர் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



