
கோலக் கிள்ளான் தொகுதியில் திடீர் வெள்ளப் பிரச்சனையை சமாளிக்க கால்வாய்களை சீரமைக்கும் பணி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெள்ளம் அபாயம் அதிகம் உள்ள கம்போங் பெராஜூரிட், தாமான் செலாட் டாமாய், தாமான் தெலுக் காடோங் ஆகிய பகுதிகளில் கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கோலக் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான் ஹூரி கூறினார். கடல் பெருக்கை எதிர் கொள்வதற்கும் வட்டார மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஏதுவாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.



