
அந்நியத் தொழிலாளர்களை வேலை எடுப்பதைச் சட்டப்பூர்வமாக்குவதற்காக தோட்டத் தொழில்துறையில் வேலை செய்ய மலேசியர்களுக்கு ஆர்வமில்லை என அரசு காரணம் கூறுவதில் சற்றும் நியாயமில்லை என்று எம்.டி.யூ.சி. தலைமைச் செயலாளர், கமாருல் பாஹாரின் மன்சோர் தெரிவித்தார். தோட்டத் தொழில்துறையில் மலேசியர்களுக்கு மிகவும் சிரமமாய் இருக்கும், காரணம் கனமான செம்பனைப் பழத்தை அவர்களால் சுமக்க முடியாது என்று தோட்டத் துறை, மூலத் தொழில் அமைச்சர் ஸுராய்டா கமாருடின் கூறியது மலேசியர்களுக்கு நியாயமற்றதாகவே கருதப்படுகிறது. மலேசியர்கள் தோட்டத் தொழில்துறையில் வேலை செய்ய ஆர்வம் காட்டாததற்குக் காரணம் வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காததே ஆகும் என்றார்.



