
மும்பை: போதைப் பொருள் வழக்கில் கைதாகியுள்ள நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யன்கானுக்கு நீதிமன்றம் மீண்டும் ஜாமின் தர மறுத்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கோவாவுக்கு, சொகுசு கப்பல் சமீபத்தில் சென்றது. அதில் பாலிவுட் நடிகர் ஷாரூக் க்ஷகான் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் சென்றனர்.அப்போது இந்திய போதைப் பொருள் தடுப்பு படையினர் ஆர்யன் கான் உட்பட எட்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் ஜாமின் கோரி ஆர்யான் கான் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி, ஆர்யன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.



