
அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 6 தொகுதித் தலைவர்களிடமிருந்து வேட்பாளர்களின் பெயர் பட்டியலை மலாக்கா பெர்சத்து பெற்றுள்ளது. கட்சியின் உயர்மட்டத்தில் முடிவெடுக்கப்படுவதற்கு முன்பு இளைஞர், மகளிர் பிரிவுகளிலிருந்தும் பெயர் பட்டியல் பெறப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வேட்பாளர்களின் குறுகியப் பெயர் பட்டியலை ஆய்வுச் செய்து வேட்பாளர் நியமனம் வரும் நவம்பர் மாதம் 8ஆம் தேதிக்கு முன்பு பெர்சத்து தலைவர், டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் முடிவு செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



