31.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

நூர் இஸாம் வேட்பாளர் அல்ல! பக்கத்தான் ஹரப்பான் உறுதிப்படுத்தியது

🔥 Views : 6
👁 Reading Now : 49

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் நூர் இஸாம் வேட்பாளர் பட்டியலில் இல்லை என்று பக்கத்தான் ஹரப்பான் உறுதிப்படுத்தியுள்ளது. பெக்கலான் பத்து சட்டமன்ற தொகுதி உறுப்பினரான அவரை வேட்பாளராக அறிவிக்க பக்கத்தான் ஹரப்பான் நிராகரித்து விட்டது. மலாக்கா மாநில முன்னாள் முதல்வர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் உட்பட நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை மீட்டுக் கொண்டதால் மலாக்கா மாநில அரசாங்கம் கவிழ்ந்து விட்டது. இந்நிலையில் வரும் நவம்பர் 20 ஆம் தேதி மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 2018 இல் நடைபெற்ற தேர்தலில் ஜசெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நூர் இஸாம் உட்பட நான்கு பேர் அணி தாவியதால் மலாக்காவில் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி கவிழ்ந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles