
எந்தத் தேர்தலிலும் பெர்சத்து கட்சியுடன் ஒத்துழைப்பு இல்லை என்று அம்னோ இன்று திட்டவட்டமாக அறிவித்தது. அம்னோ பொதுப் பேரவையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு ஏற்ப அம்னோ கட்சி பெர்சத்துவுடன் ஒத்துழைப்பு இல்லை என்று அவர் கூறினார். மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வகையில் நேற்று மலாக்கா மாநில அம்னோ தொகுதி தலைவர்களை அவர் சந்தித்துப் பேசினார். பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியுடன் அம்னோ ஒத்துழைக்குமா என்ற கேள்விக்கும் அப்படி ஒன்றும் இல்லை என்றார் அவர்.
