
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 20 ஆம் நடைபெறுகிறது. நவம்பர் 8 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் இடம் பெறும் வேளையில் இம்முறை 28 தொகுதிகளில் மும்முனைப் போட்டி ஏற்படுவது உறுதி என்று வர்ணிக்கப்படுகிறது. டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் பக்கத்தான் ஹரப்பான் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதேசமயம் அம்னோ தலைமையில் தேசிய முன்னணி மற்றும் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையில் பெரிக்கத்தான் நேஷனலும் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. நாங்கள் மும்முனைப் போட்டியை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தெரிவித்தார். இம்முறை பெர்சத்து மற்றும் அம்னோ இடையே நேரடி பலப்பரிட்சை ஏற்பட்டுள்ளது.



