
உண்மையான போராட்டத்திலிருந்து கட்சி தவறி விட்டதால்,கட்சி உறுப்பினர் உட்பட அனைத்துப் பதவிகளிலிருந்தும் உடனடியாக விலகுவதாக பெர்லிஸ் மாநில ஆராவ் தொகுதி பெர்சத்து தலைவர் அமீர் ஹசான் தெரிவித்தார். கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் பதவியிலிருந்தும் விலகுவதாகவும் அறிவித்த அவர்,தமது பதவி விலகல் அக்டோபர் 15 -ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக சொன்னார். பெர்சத்து கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் மூலம்,கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினிடம் ஒப்படைக்கப்பட்டது என்றார். ஷெரட்டன் திட்டம் வாயிலாக பெர்சத்து கட்சி செத்து விட்டது.உண்மையான போராட்டத்திற்கு பதிலாக கட்சியில் பதவி வெறிதனமே தலை தூக்கியுள்ளதாக கூறிய அவர்,இனியும் நான் கட்சியின் உறுப்பினர் அல்ல என்றார்.



