
Sop விதிமுறைகளை பின்பற்றி உணவகங்களில் சாப்பிடும் பொதுமக்கள் அதன் பின்னர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கேட்டுக் கொண்டுள்ளார். சாப்பிடும்போது மட்டுமே முகக்கவசம் அகற்றவேண்டும். அதன்பின்னர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றார் அவர். உணவங்களில் சாப்பிட்ட பின்னர் பலர் முகக்கவசம் அணியாமல் உரையாடிக் கொண்டிருக்கும் காட்சிகள் புத்ராஜெயாவில் உள்ள பல உணவகங்களில் காணமுடிகிறது. ஆகவே உணவு சாப்பிட்டவுடன் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.



