
Langkah Sheraton நடவடிக்கை பின்னர் பெர்சத்து கட்சி மடிந்துவிட்டது என்று குறிப்பிட்டிருக்கும் பெர்லிஸ் ஆராவ் தொகுதி தலைவர் அமீர் ஹசான் கட்சியில் இருந்து விலகி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். பெர்சத்து கட்சி மடிந்துவிட்டது என்பதால் இனியும் நான் அந்த கட்சியின் உறுப்பினர் அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையான போராட்டத்திலிருந்து கட்சி தவறி விட்டதால்,கட்சி உறுப்பினர் உட்பட அனைத்துப் பதவிகளிலிருந்தும் உடனடியாக விலகுகிறேன். கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் பதவியிலிருந்தும் விலகுவதாகவும் அறிவித்த அவர்,தமது பதவி விலகல் அக்டோபர் 15 -ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக சொன்னார்.



