24.7 C
Kuala Lumpur
Thursday, July 30, 2026

Vetri

வெள்ளம் ஏறினால் மக்கள் எங்களை திட்டுகிறார்கள்! நீங்கள் என்ன செய்கிறீர்கள் மாண்புமிகு கணபதி ராவ் ஆவேசம்

🔥 Views : 23
👁 Reading Now : 59

குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் ஏறினால் மக்கள் எங்களை கண்டபடி திட்டுகிறார்கள். அண்மைக்காலமாக ஷா ஆலம் உட்பட கிள்ளான் பகுதிகளில் மோசமான வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வெள்ளத்தில் பரிதவிக்கும் மக்களுக்கு உதவு சென்றால் அவர்கள் எங்களை கண்டபடி திட்டுகிறார்கள் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதி ராவ் சுட்டிக்காட்டினார். ஷா ஆலம் நகராண்மைக் கழகம் மற்றும் நீர பாசான வடிகால் இலாகா இதுவரை ஆறுகளையும் கால்வாய்களையும் சுத்தப்படுத்தவில்லை. மேலும் நீரை வெளியேற்றும் இயந்திரமும் பொருத்தப்படவில்லை. என்று அவர் ஆவேசமாக குறிப்பிட்டார். நீங்கள் ஒழுங்காக வேலை செய்திருந்தால் மக்கள் எங்களை திட்ட மாட்டார்கள். இப்போது மழை காலம் நெருங்கிவிட்டது. சரியாக திட்டமிட்டு கால்வாய்களையும் ஆறுகளையும் சுத்தப்படுத்துங்கள். மெத்தப் போக்கை கைவிடுங்கள் என்று அவர் அதிகாரிளை ஆணித்தரமாக கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles