
தீபாவளி பெருநாளை முன்னிட்டு கிள்ளான் கே பி எஸ் டிராவல்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நவம்பர் 3 ஆம் தேதி ஏர் மலிண்டோ சிறப்பு விமானம் திருச்சி புறப்படுகிறது என்று கேபிஎஸ் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கேபி சாமி தெரிவித்தார்.. நவம்பர் 3ஆம் தேதி கேஎல்ஐஏ விமான நிலையத்தில் இருந்து ஏர் மலிண்டோ சிறப்பு விமானம் திருச்சி புறப்படுகிறது. தீபாவளி பெருநாளை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாட விரும்பும் இந்திய பிரஜைகள் இந்த சிறப்பு விமானத்தில் பயணம் செய்யலாம். நவம்பர் 3ஆம் திருச்சி சென்றடையும் ஏர் மலிண்டோ சிறப்பு விமானம் அன்றைய தினத்தில் கோலாலம்பூரை நோக்கி திரும்புவதால் இந்தியாவில் உள்ள மலேசிய பிரஜைகளுக்கும் நாடு திரும்பலாம். கேபிஎஸ் டிராவல்ஸ் நிறுவனத்தின் 14 ஆவது சிறப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தாயகம் திரும்ப விரும்பும் இந்திய பிரஜைகள் கேபி சாமி 016-2626755 அல்லது நிர்வாகி கவின்ராஜ் 016-2229341 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.


