27.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

புதிய யுகத்தை சந்திக்க இந்திய சமுதாயம் தயார் ஆக வேண்டும்.

இந்திய சமுதாயம் நடப்பு அரசியல் சூழ்நிலையை புரிந்து கொண்டு புதிய சவால்களுக்கு ஏற்ப தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும் என சந்திர சேகரன் கருத்து தெரிவித்துள்ளார். நமது நாட்டின் இன்றைய அரசியல் சூழ்நிலை கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் மாறுபட்டுள்ளது என்பதை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப நாமும் தயாராக இருக்க வேண்டும். கடந்த காலங்களின் அரசியல் சூழ்நிலை இப்போது இல்லை என்பதை மனதில் பதிந்து செயல் படவேண்டும். மேலும் இனிவரும் காலங்களில் இனம் சார்ந்த கட்சிகள் இங்கு தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். 15-ஆவது பொதுதேர்தலில் எந்த ஒரு கட்சியும் தனித்து வெற்றி அடைய முடியாது. அத்தோடு மூன்று அல்லது நான்கு முனை போட்டி ஏற்படுவதும் தவிர்க்க முடியாது என்பதோடு இன அடிபடையிலான கட்சிகள் புறக்கணிக்க பட நேரிடும். எனவே இந்திய சமுதாயம் நடப்பு அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும் என தனது பத்திரிக்கை அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles