27.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

சிலாங்கூர் மாநிலத்தில் பத்து தொகுதிகளைச் சேர்ந்த 5,000 மக்களுக்கு உணவு கூடைகள்

கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பத்து தொகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு 5,000 உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க டீம் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதுவரை எந்த தரப்பிடமிருந்தும் அறவே உதவி பெறாத தரப்பினரை இலக்காகக் கொண்ட இத்திட்டம் இவ்வாண்டு இறுதியில் செயல்படுத்தப்படும் என்று டீம் சிலாங்கூர் செயலகத்தின் தலைவர் ஷியாய்செல் கெமான் கூறினார். இந்த உணவுக் கூடை விநியோகத் திட்டத்தை இவ்வாண்டிலேயே அமல்படுத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், இத்திட்டத்தில் உதவி பெற தகுதியுள்ளவர்களை அடையாளம் காண்பதற்கு தொகுதி சேவை மையங்களுடன் தாங்கள் இணைந்து செயல்பட்டு வருவதாக சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles