24.7 C
Kuala Lumpur
Thursday, July 30, 2026

Vetri

தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு தடை! ஜனநாயகத்தை விளையாட்டுப் பொருளாக பயன்படுத்தாதீர்கள்

🔥 Views : 19
👁 Reading Now : 32

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பிரச்சனைகள் மேற்கொள்ள தடை விதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறியிருப்பதை கெஅடிலான் தேசியத் தகவல் பிரிவு தலைவர் சம்சூல் இஸ்கந்தார் சாடியுள்ளார். ஜனநாயகத்தை ஒரு விளையாட்டுப் பொருளாக பயன்படுத்தாதீர்கள் என்று அவர் நினைவுறுத்தி உள்ளார். தேர்தல் ஜனநாயக முறையில் நடத்தப்பட வேண்டும். அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது எந்த வகையில் நியாயம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று தொடங்கி வரும் நவம்பர் 27 ஆம் தேதி வரை நாட்டில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கைது ஜமாலுடின் குறிப்பிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles