
நாட்டில் இதுவரை 2 கோடியே 21 லட்சத்து 43 ஆயிரத்து 545 பேருக்கு இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 கோடியே 28 லட்சத்து 13 ஆயிரத்து 885 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். நாட்டில் நேற்று 124,530 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அவர்களில் 106,261 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகவும் 9,831 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்
