33.9 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

என்னை வாழவைத்த தெய்வங்களுக்கு நன்றி நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

🔥 Views : 9
👁 Reading Now : 31

திரைத் துறையின் உயரிய விருதாக கருதப்படும் இந்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது எனப்படும் வாழ் நாள் சாதனையாளர் விருது நேற்று நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. டில்லியில் நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிக்கு இவ்விருதினை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கி சிறப்பித்தார். தமிழ் சினிமாவில் இவ்விருதினை நடிகர் சிவாஜி கணேசனும், இயக்குனர் பாலச்சந்தர் மட்டுமே பெற்றுள்ளனர். அந்த வகையில் திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை தமிழ் சினிமாவில் பெரும் மூன்றாவது நபர் ரஜினிகாந்த் என்ற பெருமையை பெற்றுள்ளார். விருதை பெற்ற பிறகு ரஜினிகாந்த் பேசும்போது, ‘எனக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி, இந்த விருதை என்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு சமர்ப்பிக்கிறேன். மேலும் என்னை அடையாளம் காட்டிய நண்பர் பகதூருக்கு நன்றி. ரசிகர்கள் மற்றும் என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி’ என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles