
நடிகர் விஜேய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த காருக்கு வரி செலுத்துவது தொடர்பாக நீதிபதி தெரிவித்த கருத்து, தனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திவிட்டதாக நடிகர் விஜய் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த காருக்கு வரி விலக்கு வழங்கக்கோரி விஜேய் செய்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், தள்ளுபடி செய்ததோடு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த அபராதத் தொகையை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்குமாறும் தெரிவித்தார். நடிகர்கள் ரியல் வாழ்வில் ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது” என விமர்சனம் செய்தார். சமூக நீதிக்குப் பாடுபடுவதாகக் கூறும் நடிகர்கள் வரிவிலக்கு கோருவதை ஏற்க முடியாது” எனவும் தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி தெரிவித்திருந்த சில கருத்துகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து நடிகர் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நடிகர் விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இன்று தாக்கல் செய்த மனுவில் நீதிபதியின் கருத்தால் நடிகர் விஜேய்க்கு மன உளைச்சல் ஏற்படுத்தி விட்டதாக குறிப்பிட்டனர்.



