
ஜாலான் கோம்பாக் பசார் ராயா பேராங்காடியில் உள்ள நகைக்கடையில் நுழைந்த 3 கொள்ளையர்கள் ஒரே நிமிடத்தில் நகைகளை கொள்ளையிட்டு துணிகரமாக தப்பிச் சென்றனர்.
பாராங் கத்திகள் வைத்திருந்த மூன்று கொள்ளையர்கள் நகைக் கடையில் கொள்ளையடித்த சம்பவம் அங்குள்ள ரகசிய கேமராவில் பதிவாகி உள்ளது.
கொள்ளையர்களை தேடும் பணி தொடர்வதாக வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்ஹாரி அபு சமா தெரிவித்தார்.
