31.2 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

180,000 வெள்ளி சேமிப்பில் பத்திரமாக இருக்கிறது; சிலாங்கூர் மாநில ஓட்டப்பந்தய சங்கத்திற்கு நானே சட்டப்பூர்வ தலைவர்!

🔥 Views : 6
👁 Reading Now : 22

சிலாங்கூர் மாநில ஓட்டப்பந்தய சங்கத்திற்கு நானே இன்னமும் சட்டபூர்வ தலைவர். என்னை நீக்குவதற்கு கூட்டப்பட்ட கூட்டமும் செல்லுபடியாகாது என்று சிலாங்கூர் மாநில ஒட்டப்பந்தயச் சங்கத் தலைவர் டத்தோ எஸ் எம் முத்து தெரிவித்தார். சிலாங்கூர் மாநில ஓட்டப்பந்தய சங்கத்திற்கு சொந்தமான 1 லட்சத்து 10,000 வெள்ளி நம்பிக்கை மோசடி செய்யப்பட்டுவிட்டதாக கூறுவதில் அடிப்படை உண்மைகள் இல்லை.. வங்கியில் 110 லட்சத்து 10,000 வெள்ளி பத்திரமாக இருக்கிறது. மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் 55,000 வெள்ளி லாபமாக கிடைத்துள்ளது. மேலும் தற்போது வங்கியில் ஒட்டுமொத்தமாக 180,000 வெள்ளி பத்திரமாக இருக்கும் நிலையில் பணம் மோசடி செய்யப்பட்டதாக கூறுவது சுத்தப் பொய் என்று டத்தோ எஸ் எம் முத்து பதிலடி கொடுத்தார். சிலாங்கூர் மாநில ஓட்டப்பந்தய சங்கத் தேர்தலில் நான் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதை தடுக்கும் முயற்சியாக இது மேற்கொள்ளப் பட்டிருக்கிறது என்று நேற்று கோலாலம்பூரில் உள்ள டாங் வாங்கி மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் செய்த பின்னர் நிருபர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles