
மித்ரா மானிய நிதி முறைகேடு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 16 நிறுவன இயக்குனர்கள் யார்? என்ற கேள்வி இந்திய சமுதாயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டு பிரிவான செடிக்-ஐ முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தொடங்கி வைத்து ஆண்டுதோறும் 10கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்தார்.
2018ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தினால் அப்போதைய ஒற்றுமை துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் கொண்டு வரப்பட்ட செடிக் ‘மித்ரா’ என பெயர் மாற்றம் கண்டது.
2020இல் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் மித்ரா நிதி மானியத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடமும் புகார்கள் செய்யப்பட்டன.
இந்நிலையில் நேற்று நாடே அதிரும் வகையில் எம்ஏசிசி 16 நிறுவன இயக்குனர்களை கைது செய்தது.
கைது செய்யப்பட்ட 16 பேர் யார்? அவர்களது பின்னணி என்ன? எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள்? போன்ற பல கேள்விகள் இந்திய சமுதாயத்தில் பரபரப்பை எகிற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
