
மித்ரா நிதி மோசடி தொடர்பில் மேலும் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.
இதனுடன் இதுவரையில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசிய இந்திய சமுதாயத்துக்கு வழங்கப்பட்ட நிதியை ஒரு கும்பல் கபளீகரம் செய்துள்ளதால் இது சம்பந்தமாக மேலும் பலருக்கு எம்ஏசிசி வலை வீசியுள்ளதாக தெரிகின்றது.
இந்திய சமுதாயத்தின் பெயரை முன் வைத்து பணத்தையும் பெற்று அதனை கொடுக்க வேண்டிய இடத்தில கொடுக்காமல் தங்களின் சொந்த நலனுக்கு பயன்படுத்திக் கொண்டதாக வெளிவந்த தகவலையும புகாரையும் தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 17 பேர் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த துணை நிறுவனத்தின் அதிகாரிகளும் அடங்குவார்கள் என்று தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
