29 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய சிறப்பு கல்வி தேர்வுக் குழுவில் மாண்புமிகு சிவகுமார் இடம் பெற்றார்

🔥 Views : 15
👁 Reading Now : 70

பக்கத்தான் ஹரப்பான் மற்றும் அரசாங்கம் இடையே அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் பல சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சிறப்பு கல்வி தேர்வு குழுவில் மொத்தம் ஒன்பது நேர உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.
பக்கத்தான் ஹரப்பான் சார்பில் முன்னாள் கல்வி அமைச்சராக இருந்த சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்லி மாலிக், கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங், பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார், தித்தி வங்சா நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சிறப்பு கல்வி தேர்வு குழுவின் முதல் கூட்டம் இன்று நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெற்ற வேளையில் இந்திய சமுதாயத்தின் சார்பில் இக்குழுவில் இடம் பெற்றிருக்கும் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் கலந்து கொண்டார்.
தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து இக்குழுவில் நேரடியாக பேச தனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles