29 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

கஷ்டப்படும் டாக்ஸி ஓட்டுனர்கள் உதவ பட்ஜெட்டில் அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்

🔥 Views : 19
👁 Reading Now : 61

வருமானம் இழந்து பரிதவிக்கும் நாட்டில் உள்ள டாக்சி ஓட்டுனருக்கு உதவ அரசாங்கம் புதிய பட்ஜெட்டில் நிதி உதவி ஒதுக்கவேண்டும் என்று மலேசியா கம்யூனிகேஷன் இந்திய டாக்சி ஓட்டுனர் சங்க தலைவர் முத்து கேட்டுக்கொண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டிலுள்ள டாக்சி ஓட்டுனர்கள் படும் துயரத்திற்கு அளவே இல்லை. ஒரு நாளைக்கு 20 வெள்ளிக் கூட சம்பாதிக்க முடியாத நிலைக்கு டாக்ஸி ஓட்டுனர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. வீட்டு வாடகை செலுத்த வேண்டும். பிள்ளைகளை பராமரிக்க வேண்டும். இந்நிலையில் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் டாக்சி ஓட்டுனருக்கு உதவும் வகையில் சிறப்பு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கஷ்டப்படும் டாக்ஸி ஓட்டுநர்கள் மீது அரசாங்கம் கருணை காட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles