
வரும் நவம்பர் 4-ஆம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 11 பொருள்களுக்கு உச்ச வரம்பு விலைக்கட்டுப்பாட்டை உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவாகர அமைச்சு விதித்துள்ளது. உயிர் கோழிகள், கோழி, இறக்குமதி செய்யப்பட்ட ஆட்டிறைச்சி, ஏ.பி.மற்றும் சி ரக கோழி முட்டை, சிவப்பு மிளகாய், தக்காளி, தேங்காய், தேங்காய் துருவல் ஆகியவையே விலைக் கட்டுப்படுத்தப்பட்ட பொருள்களாகும் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார். பொருள்களின் விலை மற்றும் விநியோகத்தை நிலைப்படுத்துவதற்காக இப்பொருள்களுக்கு உச்ச வரம்பு விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.



