
தீபாவளியை முன்னிட்டு கோல குபு பாரு தொகுதியைச் சேர்ந்த 450 குடும்பங்களுக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோ கூறினார். இந்த பற்றுச் சீட்டைப் பெற்றவர்கள் வரும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் பத்தாங் காலி, எக்கோன்சேவ் பேராங்கடியில் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.



