31.2 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

கட்சித் தாவலுக்கு முடிவு கட்டுங்கள் பெர்சே அமைப்பு கோரிக்கை

🔥 Views : 11
👁 Reading Now : 57

மலாக்கா மாநிலத் தேர்தலுக்குப் பிறகு கட்சித் தாவல் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்த அனைத்து வேட்பாளர்களும் கட்சித் தாவுவதில்லை என்பதைத் தங்களின் உறுதிமொழியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பெர்சே 2.0இன் தலைவர், தோமஸ் வலியுறுத்தினார். இதன் முக்கிய நோக்கம் வாக்காளர்களின் மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதற்கு ஆகும். இதன் மூலம் அரசியல் நிலையற்றத்தன்மை ஏற்படும் வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவுவதைத் தவிர்க்கலாம். அரசியல் வேறுபாடு அல்லது சுய இலாபத்திற்காகக் கட்சித் தாவும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மக்களே தண்டனை விதிப்பர். அதனால் மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் கட்சித் தாவலால் ஏற்படும் அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வுக் காண தங்களின் தேர்தல் கொள்கைகளை அறிவிக்க வேண்டும் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles