
கெடா மந்திரி புசார், முகமட் சனுசி மாட் நோர் கோரியதைப் போல் அம்மாநில நில அடகுக்கு 10 கோடி வெள்ளி கேட்டதற்கு ஏற்ப அம்மாநிலத்திற்குப் பினாங்கு எந்த கட்டணத்தையும் செலுத்தாது என்று முதல் சௌ கோன் இயோவ் திட்டவட்டமாகக் கூறினார். நடப்பிலுள்ள ஒப்புதல், ஒப்பந்தத்திற்கு அப்பால் எந்த ஒரு கோரிக்கைக்கும் மத்திய அரசு செவி சாய்க்கக் கூடாது. முன்னதாக பினாங்கில் நிலத்தை அடகு வைப்பதற்கானக் கட்டணம் தொடர்பில் மத்திய அரசிடமிருந்து ஆண்டுக்கு 10 கோடி வெள்ளி கோரியது தொடர்பில் சௌ கோன் இயோவ் கருத்துரைத்தார்.