
வரும் நவம்பர் 20 ஆம் தேதி மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பக்கத்தான் ஹரப்பான் தொகுதி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடித்துள்ளது என்று மலாக்கா மாநில பக்கத்தான் ஹரப்பான் தலைவர் அட்லி தெரிவித்தார். பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிட மூடா கட்சி முன் வந்திருப்பதாக அதன் தலைவர் சைட் சாடிக் குறிப்பிட்டுள்ளார். மூடா கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் வேலையில் தற்போது மலாக்காவில் மிகப்பெரிய பிரச்சார பேனர்கள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் மலாக்கா மாநிலத்தில் தேர்தல் போர் முரசு கொட்டத் தொடங்கியுள்ளது.



