
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று புத்ரா உலக வாணிப மையத்தில் தேசிய முன்னணிக்கு தேர்தல் இயந்திரத்தை தொடக்கி வைக்கும் கூட்டம் நடைபெற்றது. தேசிய மீட்சித் திட்டத்தின் நான்காம் கட்டத்தில் சமூக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான கட்டுப்பாட்டினை மீறியதற்காக தேசிய முன்னணிக்கு 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. அதேசமயம் மலாக்காவில் பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்திய மூடா கட்சியை சேர்ந்த உறுப்பினருக்கு 4,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



