32.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

இந்தியர் முடிதிருத்தும் கடைகளில் வேலை செய்ய 2,000 அன்னிய தொழிலாளர்கள் தேவை!

🔥 Views : 11
👁 Reading Now : 29

நாட்டில் உள்ள இந்தியர் முடிதிருத்தும் நிலையங்களில் பணிபுரிய உடனடியாக 2,000 அந்நிய தொழிலாளர்கள் தேவைப்படுவதாக மலேசிய இந்திய சிகை அலங்கரி பாளர் சங்கத்தின் தலைவர் டாக்டர் மகேந்திரன் வெள்ளைச்சாமி தெரிவித்தார். கோவிட் காலகட்டத்தில் சொந்த ஊருக்கு திரும்பிய தமிழக தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு வரவில்லை. இவர்களுக்கு பதிலாக மாற்று தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளவும் அனுமதியும் வழங்கப்படவில்லை. இதனால் இந்தியர் முடிதிருத்தும் நிலைய உரிமையாளர்கள் தொழிலாளர் பற்றாக்குறையால் பெரும் பிரச்சினை எதிர்நோக்கி இருப்பதாக டாக்டர் மகேந்திரன் வெள்ளைச்சாமி தெரிவித்தார். 2,000 அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள அரசாங்கம் எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles