29 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

மூன்று புதிய ஹிஜ்ரா திட்டங்களுக்கு 8 கோடி வெள்ளி ஒதுக்கீடு சிலாங்கூர் அரசு அறிவிப்பு

🔥 Views : 19
👁 Reading Now : 56

ஹிஜ்ரா அறவாரியம் மூலம் அமல்படுத்தப்படும் மூன்று புதிய கடனுதவித் திட்டங்களுக்காக சிலாங்கூர் அரசு 8 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.. கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் இந்த புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மூன்று திட்டங்களும் இவ்வாண்டிலும் அடுத்தாண்டிலும் அமல்படுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். நடப்பிலுள்ள வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்புவோர், விவசாய தொழில் முனைவோர், ரமலான் சந்தை வணிகர்கள், பருவ காலப் பழங்களை விற்பனை செய்வோர் ஆகியோரை இலக்காக கொண்டு இந்த கடனுதவித் திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles