29 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

கெடா கூலிம் இந்து சங்கத்திற்கு மாண்புமிகு கருப்பையா 10,000 வெள்ளி உதவித்தொகை

🔥 Views : 9
👁 Reading Now : 38

கெடா மாநிலத்தில் கூலிம் வட்டாரத்தில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்து சங்கத்திற்கு பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கருப்பையா 10,000 வெள்ளி உதவித்தொகை வழங்கினார். கூலிம் வட்டாரத்தில் வசதி குறைந்த மக்களுக்கு தீபாவளி பட்டு சீட்டுகளை வழங்கும் நிகழ்ச்சியை கூலிம் இந்து சங்கம் ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய மாண்புமிகு கருப்பையா தனது சார்பில் பத்தாயிரம் வெள்ளியை கூலிம் இந்து சங்கத்திற்கு வழங்கினார். இளையோர்கள் மத்தியில் நற்பண்புகளை வளர்ப்பதற்கு இந்து சங்கங்கள் துணைபுரிய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles