29.6 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

ஐரோப்பிய பனிச்சறுக்கு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார் ஸ்ரீ அபிராமி

🔥 Views : 10
👁 Reading Now : 31

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான எஸ்டோனியா வில் நேற்று இரவு நடைபெற்ற ஐரோப்பிய பனிச்சறுக்கு போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த இளம் நட்சத்திர வீராங்கனை ஸ்ரீ அபிராமி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இப்போட்டியில் மொத்தம் 16 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் ஆசிய மண்டல சார்பில் ஒரே வீராங்கனை இவர் ஆவார். ஐந்து சுற்றுகள் அடங்கிய பனி சறுக்கு போட்டியில் ஸ்ரீ அபிராமி 26.55 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த எரினா 29.10 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை வாகை சூடினார். எஸ்டோனியாவை சேர்ந்த மற்றொரு வீராங்கனை எரிசெவாட்டா 26. 52 புள்ளிகள் பெற்று வெண்கலப்பதக்கம் வென்றார். இந்த வாரத்தில் லாட்வியா நாட்டில் நடைபெறும் பனிச்சறுக்கு போட்டியிலும் ஸ்ரீ அபிராமி கலந்து கொள்கிறார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles