
பூசாட் டியூஷன் அரினா மெட்ரிக் ஏற்பாட்டில் நடைபெற்ற இடைவிடாத 14 மணி நேர கணிதப் பாட பட்டறையில் நாடு தழுவிய அளவில் 1,500 மாணவர்கள் பங்கேற்றனர் கணிதப் பாடம் போதிப்பதில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர் ஜனகன் தலைமையில் இந்த 14 மணி நேர கணித பட்டறை மலேசியா சாதனையாளர் புத்தகத்திலும் இடம் பிடித்தது. நோய்த்தொற்று காலத்தில் தற்போது அதிகமான மாணவர்கள் இணையம்வழி கல்வி கற்று வருகிறார்கள். அவர்கள் கணிதம் பாடத்தில் சிறந்து விளங்கும் வகையில் இலவசமாக இந்த பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. முதல் முறையாக நடத்தப்பட்ட இந்தப் பட்டறையில் 1,500 மாணவர்கள் கலந்து கொண்டேன் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
