29.4 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

மித்ராவுக்கான விசாரணைக் குழுவை எம்.ஏ.சி.சி. மற்றும்ஒற்றுமைத் துறை அமைச்சும் இணைந்து அமைத்தன

மித்ராவின் நிதி ஒதுக்கீடு மோசடித் தொடர்பானச் சிறப்புக் குழுவை எம்.ஏ.சி.சி.யும் தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சும் இணைந்து அமைத்தன. பத்து லட்சம் வெள்ளிக்கும் குறைவான ஒதுக்கீட்டுத் தொகையைப் பெற்றதாகக் கூறப்படும் 310 நிறுவனங்கள் தொடர்பில் மறுஆய்வுச் செய்ய அமைச்சுடன் இணைந்து எம்.ஏ.சி.சி.யும் ஒத்துழைத்தது. இவ்விசாரணை 2 கட்டங்களாக மேற்கொள்ளப்படும். அதில் முதல் கட்டமாக 10 லட்சம் வெள்ளி முதல் 90 லட்சம் வெள்ளி வரை மானியம் பெற்ற 27 நிறுவனங்கள், சங்கங்கள், அரசு சார்பற்ற இயக்கங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். இரண்டாவது கட்டமாக 10 லட்சம் வெள்ளிக்கு குறைவான மானியங்கள் பெற்ற 310 நிறுவனங்கள் மீது கவனம் செலுத்த அமைச்சுடன் இணைந்து எம்.ஏ.சி.சி. செயல்படும். இதன் மூலம் 2 கோடி 30 லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டுத் தொகையை கடந்த 2019 தொடங்கி இவ்வாண்டு வரை மித்ரா ஒதுக்கீட்டு மானியம் அங்கீகரிக்கப்பட்ட 337 நிறுவாங்கள், சங்கங்கள், அரசு சார்பற்ற இயக்கங்களை விசாரணைக் குழு தற்போது அடையாளம் கண்டு விட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles