
பினாங்கு மாநிலத்தில் புக்கிட் மெர்த்தாஜாம், அல்மா, தாமான் செஜாத்திரா சிறார்கள் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம் விமரிசையாக நடைபெற்றது. புக்கிட் மெர்த்தாஜாம் இந்து தர்ம மாமன்றத் தலைவர் இராஜலட்சுமி தலைமையில் தீபாவளி நிகழ்ச்சி இடம் பெற்றது. புக்கிட் மெர்த்தாஜாம், அருள் நிலைய தலைவர் இராஜலட்சுமி அம்மா, அல்லி மாறன், பினாங்கு கலை கலாச்சார சேவை மன்றத்தின் தலைவர் பால நம்பியார், தொழில் முனைவர் மணியம், அருள் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
