33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

18 வயது வாக்களிப்பு: 2022 ஜனவரியில் அமல்

🔥 Views : 8
👁 Reading Now : 58

சரவா, கூச்சிங் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க 18 வயதினர் வாக்களிப்பு 2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி அமல்படுத்தப்படும் என்று பிரதமர், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். இதன் அமலாக்கத்திற்கான முன்பாட்டு நடவடிக்கைகளை அடுத்தாண்டு செப்டம்பரில்தான் மேற்கொள்ள முடியும் என்று தேர்தல் ஆணையம் இதற்கு முன் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டப் போதிலும் இத்தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யப் போவதில்லை என்று அமைச்சரவை முடிவுச் செய்துள்ளது. நீதிமன்றத்தில் தீர்ப்பளித்தப் பின்னர் அமைச்சரவை அதை மேல் முறையீடு செய்ய்லாம். இருந்த போதிலும் இளம் தலைமுறைக்கு மதிப்பளிக்கும் வகையில் சரவா நீதிமன்றம் அளித்தத் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்வதில்லை என்று அமைச்சரவை முடிவுச் செய்துள்ளது. 2022 ஜனவரி மாதம் 1ஆம் தேதி 18 வயது வாக்காளர்களுக்கானத் தானியங்கிப் பதிவு முறை தொடங்கப்பட்டு விடும் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles