
முறையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் வரும் 2040 ஆம் ஆண்டுவாக்கில் மலேசியர்களில் நால்வரில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும் என்று 2016 ஆம் ஆண்டு உலகலாவிய பக்கவாத நோய்த் தரவு மீதான அனைத்துலக ஆய்வு கூறுகிறது. இந்த நோய் அபாயத்தை தவிர்ப்பதற்கு பொது மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா வலியுறுத்தினார். புகைப்பழக்கம் மற்றும் புகையிலையைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது, சத்துணவுகளை மட்டுமே உட்கொள்வது, உடற்பயிற்சி மேற்கொள்வது, மதுப்பழக்கத்திற்கு ஆட்படாமலிருப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் பக்கவாத நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று அவர் சொன்னார்.



