
இன்னும் சில தினங்களில் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட ஆவலுடன் காத்திருக்கும் ஊஜோங் பத்து மக்களுக்கு பாகான் டாலாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி நேரில் சென்று வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டதோடு தீபாவளி அன்பளிப்பையும் கொடுத்து மகிழ்ந்தார். சுமார் 106 இல்லங்களுக்குச் சென்று மனம் மகிழ்ந்த அவர்,இதுபோன்ற நன்னாளில் யாரும் துன்பத்தில் இல்லாமல் ,இன்பத்தில் திளைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில்,தமது சட்டமன்ற சேவை மையத்தின் சிறிய உதவி இதுவென அவர் கூறினார்.
